லக்னோவில் படித்து வரும் இறுதியாண்டு பொறியியல் மாணவி ஒருவர், கடத்தப்பட்டு நகரும் காரில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். இந்த கொடூர சம்பவம் நடைபெற்றது லக்னோவின் சிகந்திரா பகுதியில்.

அந்தப் பெண்ணை கல்லூரியின் முன்னாள் மாணவர் ஒருவர் கடத்திச் சென்றுள்ளார். காரில் கட்டிப்போட்டு பாலியல் வன்கொடுமை செய்த பின், அந்தப் பெண்ணை அரை நிர்வாண நிலையில் ஆக்ரா-டெல்லி நெடுஞ்சாலையில் கைவிட்டுச் சென்றுள்ளார்.

புகார் அளித்த அந்தப் பெண், கல்லூரியில் படிக்கும் போது அவர்  என்னை  காதலித்த நிலையில் நான் மறுத்ததால் அவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததகாக கூறியுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தப்பி ஓடியுள்ள குற்றவாளியை போலீசார் தேடி வருகின்றனர்.