
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் விடுதலை. இந்த திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் பாகத்தில் சூரியன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளியான நிலையில் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற விடுதலை படத்தின் வெற்றி விழாவில் பேசிய விஜய் சேதுபதி, படத்தின் எந்த ப்ரேமை பார்த்தாலும் வெற்றிமாறன் தான் பிரதானமாக தெரிவார். இப்போது கூட அவரை பார்த்து பேச முடியவில்லை கூச்சமாக இருக்கும். ஒருவேளை நான் சரக்கு அடிச்சிட்டு போதையில் பேசினாலும் அவரிடம் மரியாதையாக தான் பேசுவேன். சிந்தனை நிலை தடுமாறினாலும் அவரிடம் மரியாதை தவறியதில்லை. அவர் மேல் ரொம்பவே மரியாதை வச்சிருக்கேன் என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.