
இன்றைய காலகட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் சம்பவங்கள் அதிகரித்துள்ளது .இதனால் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்புபற்ற சூழல் உருவாகியுள்ளது என்றே பெற்றோர் அஞ்சுகிறார்கள். வெளியிடங்களில் நடந்து வருவதை போல தற்போது பள்ளியிலும் பெண் குழந்தைகளுக்கு பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஒரு பகுதியில் ஆரம்பப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர் ஒருவர் சிறுமிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறுமிகளின் பெற்றோர்கள் அந்த ஆசிரியர் மீது புகார் அளித்துள்ளனர். இது குறித்து சிறுமிகள் கூறுகையில், தங்களுடைய அந்தரங்க உறுப்புகளை காட்டும் படி அவர் கேட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர் . இதனையடுத்து காவல்துறையினர் ஆசிரியர் மீது வழக்கு பதிவு செய்து போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.