தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சமீபத்தில் டெல்லி சென்று அமித்ஷாவை நேரில் சந்தித்தார். அப்போது எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பாஜக 2026 ஆம் ஆண்டு தேர்தலை சந்தித்தால் கண்டிப்பாக மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்திக்கும் என்று  சொன்னதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது தமிழகத்தில் மீண்டும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி அமையும் என்று அமித்ஷா சொன்ன நிலையில் எடப்பாடி பழனிச்சாமி கூட சமீபத்தில் அவரை நேரில் சென்று சந்தித்தார். ஆனால் அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி அமைத்தால் தான் பதவியை ராஜினாமா செய்வேன் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

தற்போது தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என்று அண்ணாமலை சொன்னதாக வெளியான தகவல் குறித்து நடிகர் எஸ்வி சேகர் தன்னுடைய எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, ஒரு கவுன்சிலர் கூட ஆக துப்பில்லாத ஒருவர் முதலமைச்சரா.? 1.5 கோடி உறுப்பினர் உள்ள கட்சியையும் எடப்பாடி பழனிசாமியையும் அண்ணாமலை கணிக்கிறாராம். அண்ணாமலை இருக்கும் வரை டிரம்ப் மற்றும் புதின் வந்தால் கூட ரிசல்ட் பூஜ்ஜியம் தான். 2026 இல் வாஸ் அவுட். மேலும் தன்னுடைய தனிப்பட்ட பகையை கட்சியின் மூலம் அண்ணாமலை தீர்த்துக் கொள்கிறார் என்று கடுமையாக பதிவிட்டுள்ளார்.