
அனைவர் வீட்டிலும் சமையலறை அஞ்சறைப் பெட்டிகளில் இருக்கும் முக்கியமான பொருள்களில் ஒன்றுதான் வெந்தயம். எண்ணற்ற நன்மைகளைக் கொண்டுள்ள இந்த வெந்தயம் சரும பராமரிப்பு முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் உதவுகிறது. இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, இரும்புச்சத்து, நார்ச்சத்து, பயோட்டின், மக்னீசியம், மாங்கனிஸ் மற்றும் தாமிர உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
அதேசமயம் வெந்தயம் ஒரு சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றியாகவும் உள்ளது. குறிப்பாக பெண்களின் கூந்தல் அழகை மேம்படுத்தும் முக்கிய பொருட்களில் வெந்தயம் ஒன்று. முடி உதிர்தல், பொடுகு, நரைமுடி இவற்றிற்கு தீர்வு காணும் வெந்தயத்தை இரவில் ஊற வைத்து அதன் பிறகு அரைத்து பேஸ்ட் செய்து காலையில் குளிக்கும் போது தலையில் தேய்த்து குளித்தால் உடல் குளிர்ச்சி அடையும்.
அதுவே வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து குடலில் கெட்டியான செல்லை உருவாக்கி சர்க்கரை மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்புகளை ஜீரணிக்க உதவும். நீரிழிவு நோயாளிகளின் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதற்கும் இன்சுலின் உற்பத்தியை தூண்டவும் இது உதவுகின்றது. உடல் எடையால் அவதிப்படுபவர்கள் வெந்தயத்தை அடிக்கடி எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக வயிற்றுக் கொழுப்பை எரிக்க உதவுவதோடு பசியை குறைக்கவும் இது உதவும்.
முகத்தில் பருக்கள் அதிகம் உள்ளவர்கள் இதை பயன்படுத்தினால் தோல் நெகிழ்ச்சி தன்மை அதிகரிக்கும். மலச்சிக்கல் ஏற்படாமல் செரிமானத்தை மேம்படுத்தும். குடல் அலர்ஜியை நீக்குவதுடன் பெருங்குடல் புற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கின்றது. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலி நிவாரணையாக இருக்கும் வெந்தயம் கெட்ட கொழுப்பை குறைப்பதால் இதய நோய் வராமல் பாதுகாக்கும்.