
ஹைதராபாத் நகரில் டி.எஸ்.ஆர்.டி. சி பேருந்தில் மூன்று பெண்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ஹக்கீம் பெட் டிப்போவில் இருந்து பொல்லாரம் ஸ்டாப் வரை பயணித்த பெண்களுக்கு இடையே இருக்கையில் அமர்வது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அந்த வீடியோவில் ஒரு பெண் மற்றொரு பெண்ணை காலணியால் அடிக்க முயன்றார். சுற்றி இருந்தவர்கள் எவ்வளவோ சமாதானப்படுத்த முயன்றும் மூன்று பெண்களும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதனால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் பேருந்தும் தாமதமாக அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இந்த விவகாரம் தொடர்பாக பொல்லாரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் பேருந்து நிலையத்தில் இரண்டு பெண்கள் இருக்கைக்காக சண்டை போட்டுக் கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த பெண்கள் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டை போட்டனர். எனவே பேருந்துகளில் நடக்கும் மோதல்கள் தொடர்பான விசாரணை நடத்தி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
బస్సులో సీటు కోసం బూట్లతో కొట్టుకున్న మహిళలు
హైదరాబాద్ – హకీమ్ పేట డిపోకి చెందిన ఆర్టీసి బస్సులో.. బొల్లారం స్టాప్ వద్ద ఎక్కి బస్సులో సీట్ కోసం కొట్టుకున్న ముగ్గురు మహిళలు
బొల్లారం పోలీస్ స్టేషన్లో కేసు నమోదు చేసిన పోలీసులు pic.twitter.com/NXmtKd0tIo
— Telugu Scribe (@TeluguScribe) March 16, 2025