பிரித்திவிராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு லூசிபர் திரைப்படம் ரிலீஸ் ஆனது. இந்த படத்தின் இரண்டாவது பாகமாக எல்.2 எம்பிரான் திரைப்படம் கடந்த 27-ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆனது.

ரிலீசான 11 நாட்களில் எம்புரான் திரைப்படம் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்தது. இந்த நிலையில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் எம்புரான் திரைப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் படத்திலிருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டது. இந்த நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் எம்புரான் திரைப்படத்தை பார்த்தார்.

அவர் கூறியதாவது, எம்புரான் படத்தில் வரும் ஒரு சிறு காட்சிகளை வைத்து பாஜக, சங் பரிவார் அமைப்புகள் பெரும் பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். ஆனால் எம்புரான் கம்யூனிசம் படம் கிடையாது என கூறியுள்ளார்.