சேலம் மாவட்டம் ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரியும் ஏட்டு ஒருவர் உதவி ஆய்வாளரிடம் காவல் ஆய்வாளர் கூறியதாக சொல்லி 5 ஆயிரம் ரூபாய் வாங்கியுள்ளார். அதில் நான்கு ஆயிரம் மட்டுமே திருப்பி கொடுத்துள்ளார்.

மீதி 1000 எங்கே என உதவி ஆய்வாளர் கேட்டபோது நீதிமன்றத்திற்கு சென்றதால் அதற்கு செலவாகிவிட்டது என கூறினார். அதனால் உதவி ஆய்வாளர் கோபமடைந்து வாக்குவாதம் செய்தார். பின்பு இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கினர்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக காவலாளிகள் இருவரையும் விலக்கி விட்டனர். பின்பு உயர் அதிகாரிகளுக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்பு உதவி ஆய்வாளரை கொட்டாளப்பட்டி காவல் நிலையத்திற்கும், தலைமை காவலரை இரும்பாலை காவல் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.