விருதுநகரில் விஜய பிரபாகரனை திட்டமிட்ட சூழ்ச்சியால் வீழ்த்தியுள்ளனர் என்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றம்சாட்டியுள்ளார். மதிய உணவு இடைவேளைக்குப் பின் 2 மணி நேரம் வாக்கு எண்ணிக்கையை ஆட்சியர் நிறுத்தியதாகக் கூறிய அவர், மறு வாக்கு எண்ணிக்கை கோரியதை தேர்தல் அதிகாரிகள் ஏற்கவில்லை என்று சாடினார்.

இந்நிலையில் “இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில்தானே இருக்கிறீர்கள்? ஒரு சின்ன பையன் போட்டியிட்டு வருகிறாரே. ஜெயிக்க வெச்சாதான் என்ன?” என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கேள்வி எழுப்பியிருக்கிறார். விருதுநகர் தொகுதியில் தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் போட்டியிட்டார். காங்கிரஸ் வேட்பாளரிடம் அவர் தோல்வியைத் தழுவிய நிலையில் பிரேமலதா இவ்வாறு வினவியுள்ளார்.