ஒரு சிலரைத் தவிர அனைவரையும் கட்சியில் இணைத்துக்கொள்வோம் என அதிமுக பொதுச்செயலாளர் EPS கூறியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக செயலாளர்கள் கூட்டம் நடந்து வருகிறது. இக்கூட்டத்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தல் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியானது. முன்னதாக, பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் EPSக்கு அங்கீகாரம் அளித்ததால், அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில் மா.செ கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பின் வெற்றி பெற்றதாகவும், தமிழகத்தில் ADMK பிரதான எதிர்கட்சியாக செயல்படும் என்று கூறிய அவர், கட்சியை மதிக்கும் அனைவரையும் இணைத்துக்கொள்வோம், மற்றவர்களை பற்றி பேசி இனி எங்களது காலத்தை வீணாக்கமாட்டோம் எனவும் கூறினார்.