
நடிகர் விஜய் சேதுபதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தற்போது தொகுத்து வழங்குகிறார். கடந்த இரண்டு வாரங்களாக தனது வித்தியாசமான பேச்சின் மூலம் விஜய் சேதுபதி அனைவரையும் கவர்ந்தார். இவரது மகன் சூர்யா சேதுபதி பீனிக்ஸ் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். முன்னதாக விஜய் சேதுபதியுடன் இணைந்து சிந்துபாத் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் மாதம் 14-ஆம் தேதி ரிலீசாக உள்ளது இந்த நிலையில் பீனிக்ஸ் படத்தின் அறிமுக விழாவில் சூர்யா விஜய் சேதுபதி பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறியதாவது, அப்பா வேற. நான் வேற. போஸ்டரில் கூட சூர்யா என்று தான் போட்டு இருக்கிறோம். சூர்யா விஜய் சேதுபதி என்று போடவில்லை என கூறினார். மற்றொரு கருத்தில் நான் சின்ன வயசிலிருந்து மிகவும் கஷ்டப்பட்டு தான் இந்த இடத்துக்கு வந்திருக்கிறேன். என் அப்பா தினமும் எனக்கு 500 ரூபாய் தான் செலவுக்கு கொடுப்பார். அதனால் சினிமாவில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று வந்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். மாதம் 15 ஆயிரம் ரூபாய் செலவு செய்வது கடினமாக உள்ளதா? ஐயோ பாவம் ரொம்ப கஷ்டப்படுற குடும்பம் போல என நெட்டிசன்கள் சூர்யாவை கலாய்த்து வருகின்றனர்.