
300 கிராம் மிளகாய் சாஸை சாப்பிட்டு ஒருவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த செஸ் ப்ராஸ்டா என்ற இளைஞன் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 60 வினாடிகளில் 332.70 கிராம்ஸ் சூடான சாஸை சாப்பிட்டு சாதனை படைத்ததாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இளைஞர் மிளகாய் சாஸை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.