இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவான திரைப்படம் சப்தம். இந்த படத்தில் நடிகர் ஆதி ரூபன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.  7ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், ரெடின் கிங்ஸ்லி  உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வெளியான முதல் நாள் ஒரு கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் இயக்குனர் சங்கர் சப்தம் திரைப்பட குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், ஒலி தொடர்பான பேய் படத்தை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு புதிய அணுகுமுறை. இயக்குனர் அறிவழகனின் தொழில்நுட்ப அறிவும், கதை நகரும் விதமும் சிறப்பாக உள்ளது. இடைவேளைக்கு முந்திய காட்சியும், ஒலியும் எதிர்பாராத ஒன்று. ஆதியின் நடிப்பும், இசையும் அற்புதமாக உள்ளது” என்று பாராட்டியுள்ளார்.