தமிழ் சினிமாவில் கற்றது தமிழ் என்ற படத்தின் மூலமாக அறிமுகமானவர் அஞ்சலி. அதன் பிறகு அங்காடித்தெரு என்ற படத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தார். தற்போது அஞ்சலி ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடிக்க உள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அப்போது பேசிய அவர், சமூக வலைதளங்களில் எனக்கு நான்கு திருமணங்கள் செய்து வைத்து விட்டார்கள்.

இது போன்ற திருமண வதந்திகள் வரும்போது வீட்டில் உள்ள அனைவருமே கவலைப்பட்டார்கள். என் பெற்றோரிடம் நான் காதலிக்கிறேன் என்று ஒரு பையனை கூட்டிக்கொண்டு சென்றால் நம்ப மாட்டார்கள். இப்போதைக்கு திருமணம் இல்லை என்றும் 50 படங்களை கடந்து விட்டாலும் பிஸியாக இருக்கிறேன். இன்னும் பல சாதனைகளை நிகழ்த்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.