
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மதுரா மாவட்டத்தில் மகோரா காவல் நிலையம் அமைந்துள்ளது. இங்கு சப் இன்ஸ்பெக்டராக மோகித் ராணா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதே காவல் நிலையத்தில் பெண் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அதாவது சம்பவ நாளில் இருவரும் பணியில் இருந்த நிலையில் மோகித் ராணா மது போதையில் இருந்துள்ளார். அவர் போதையில் அந்தப் பெண் சப் இன்ஸ்பெக்டரின் அறைக்கு சென்று அவரிடம் அத்துமீற முயன்றார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் சப் இன்ஸ்பெக்டர் உயர் அதிகாரியிடம் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் விசாரணை நடத்தியதில் மோகித் ராணா மீதான குற்றம் உண்மை என தெரிய வந்தது.
இந்நிலையில் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய வருவதற்கு முன்பாக ஆபாச படங்களை காண்பித்து அதை பார்க்குமாறு அந்த சப் இன்ஸ்பெக்டர் கட்டாயப்படுத்தியதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் தன் செல்போனில் இருந்த ஆபாச வீடியோக்களை மோகித் அழித்ததோடு தன்னுடைய ஸ்மார்ட் வாட்சையும் கழட்டி வெளியே வீசியுள்ளார். மேலும் அவரை போலீசார் தற்போது கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.