தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ராஷ்மிகா மந்தனா தமிழில் வாரிசு மற்றும் சுல்தான் போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடிகர் தனுஷ் உடன் சேர்ந்து குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதன்பிறகு பாலிவுட் சினிமாவிலும் நடித்து வரும் ராஷ்மிகாவின் நடிப்பில் கடந்த வருடம் அனிமல் திரைப்படம் வெளியாகி 800 கோடி வரை வசூல் சாதனை புரிந்தது. இந்த படத்தில் ரன்பீர் கபூர் ஹீரோவாக நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் ரசிகர் ஒருவர் அனிமல் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியை வெளியிட்டு ஒரு மனிதனை நம்புவதை விட பயங்கரமானது இந்த உலகில் எதுவுமில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

அதாவது முதலில் ராஷ்மிகாவுடன் ரன்வீர் பேசும் வீடியோவையும் அதன் பிறகு திரிப்தி டிம்ரி கதாபாத்திரத்தின் மீது அவருக்கு ஏற்படும் பழக்கம் குறித்த வீடியோவையும் சேர்த்து வெளியிட்டு அந்த தகவலை பதிவிட்டு இருந்தார். இதற்கு தற்போது நடிகை ராஷ்மிகா மறு பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் திருத்தம் ஒரு முட்டாள் மனிதனை நம்புவது மிகவும் பயங்கரமானது. இந்த உலகில் எவ்வளவோ நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை நம்புவது எப்போதும் ஸ்பெஷல் என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.