கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நித்திரவிளை பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த பெண்ணிடம் இருந்து தங்க நகை மற்றும் பணத்தை அதே பகுதியில் வசிக்கும் அனீஸ் என்ற இளைஞர் திருடிவிட்டு தப்பி ஓடினார். இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அந்த இளைஞர் திருடிய நகைகளை ஒரு வாரத்தில் திரும்பி தருவதாக கெஞ்சி உள்ளார்.

அதனை வீடியோவை ஆதாரமாக எடுத்துக்கொண்டு பொதுமக்கள் இளைஞரை போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அனீஸை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.