மேற்கு வங்காளம் ஹஸ்னாபாத் பகுதியை சேர்ந்த தனியார் மருத்துவர் நூர் ஆலம் என்பவர் தனது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த பெண்ணிற்கு அனஸ்தீசியா என்ற மயக்க மருந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அதனை காணொளியாக பதிவு செய்து வைத்து அந்த பெண்ணை தொடர்ந்து மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

மேலும் நான்கு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் கொடுமை தாங்க முடியாத அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். ஆனாலும் அவரது உறவினர்கள் அவரைக் காப்பாற்றி விட்டனர். இது குறித்த தகவலை வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அந்த பெண்ணின் கணவருக்கும் கூறிவிட்டனர்.

இதனால் வெளிநாட்டிலிருந்து வீட்டிற்கு வந்த கணவன் நடந்துவற்றை அந்தப் பெண்ணிடம் கேட்டு விசாரித்துவிட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.