தனது முதல் முயற்சியிலேயே UPSC சிவில் சேவைகள் தேர்வில் வெற்றி பெற்றவர் ஐஸ்வர்யா ஷியோரன், மிஸ் இந்தியா 2016 இறுதிப் போட்டியில் பங்கேற்ற மாடலாகவும் பெரிதும் அறியப்பட்டவர். ராஜஸ்தானில் பிறந்த ஐஸ்வர்யா, சிறு வயதிலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கியவர். 12ஆம் வகுப்பில் 97.5% மதிப்பெண் பெற்ற அவர், டெல்லி பல்கலைக்கழகத்திலுள்ள ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியில் வணிகப் பட்டம் பெற்றார்.

அவரது தந்தை இந்திய ராணுவத்தில் கர்னலாக பணியாற்றுகிறார். தாயாரின் தூண்டுதலால் மாடலிங் துறையில் அடித்தளமிட்ட அவர், 2014 மற்றும் 2015-இல் மிஸ் டெல்லி உள்ளிட்ட பல அழகுப் பட்டங்களை வென்றார். பின்னர், ஃபெமினா மிஸ் இந்தியா 2016 இறுதிப் போட்டிக்குள் சென்று பலரது கவனத்தையும் ஈர்த்தார். இருந்தாலும், தனது கனவு நாட்டுக்குச் சேவை செய்வதென்பதால் மாடலிங் வாழ்க்கையை விட்டு, சிவில் சேவைகளுக்குத் திரும்பினார்.

2018 ஆம் ஆண்டு UPSC தேர்வுக்கு தயாராக தொடங்கிய ஐஸ்வர்யா, 10 மாதங்கள் கடுமையாக பயின்று, தனது முதல் முயற்சியிலேயே 93வது அகில இந்திய ரேங்க் பெற்றார். IAS அல்லது IPS என்ற பதவிகளைவிட, அவர் இந்திய வெளியுறவுப் பணியைத்தான் தேர்வு செய்தார். தற்போது அவர் வெளியுறவு அமைச்சகத்தில் மூத்த அதிகாரியாக செயல்பட்டு, தனது கல்வி மற்றும் விடாமுயற்சியின் மூலம் பெருமை சேர்த்துள்ளார்.