
மகளிர் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனதை முன்னாள் கேப்டன் தோனி ரன் அவுட் ஆனதுடன் ஒப்பிட்டு ரசிகர்கள் சோகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்..
தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுனில் உள்ள நியூ லேண்ட்ஸ் மைதானத்தில் நேற்று நடந்த முதல் அரை இறுதிப் போட்டியில் இந்திய அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது. இந்த போட்டி மிகவும் பரபரப்பாக கடைசி வரை சென்றது. இந்திய அணி போராடி இறுதியில் வெற்றியை கோட்டை விட்டது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. ஆஸி அணியில் பெத் மூனி 37 பந்துகளில் (7 பவுண்டரி, 1 சிக்ஸர்) 54 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 18 பந்துகளில் 31 ரன்களும் எடுத்தனர். மேலும் மெக் லானிங் கடைசிவரை அவுட் ஆகாமல் 34 பந்துகளில் (4 பவுண்டரி, 2 சிக்ஸர்) 49* ரன்கள் எடுத்தார்.

பின்னர் கடின இலக்கை எட்டுவதற்கு இந்திய மகளிர் அணியின் துவக்க வீராங்கனைகளான ஸ்ருதி மந்தானா(2) மற்றும் ஷபாலி வர்மா(9) இருவரும் சொற்ப ரன்களில் அவுட் ஆனதை தொடர்ந்து வந்த யாஸ்திகா பாட்டியா 4 ரன்னில் அவுட் ஆக இந்திய அணி 3.4 ஓவரில் 28 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் இருவருமே கைகோர்த்து அதிரடியாக ஆடி வந்தனர்.
பின் அதிரடியாக ஆடிய ஜெமிமா 24 பந்துகளில் (6 பவுண்டரி) 43 ரன்கள் சேர்த்த நிலையில் 11வது ஓவரில் அவுட் ஆனார். ஆனாலும் ஒருபக்கம் கேப்டன் ஹர்மன்பிரீத் ஆடிக்கொண்டிருந்ததால் ஆட்டம் இந்தியாவின் பக்கமே இருந்தது.. அதோடு அவர் அரைசதமும் கடந்தார்.. அப்போதுதான் ஆட்டத்தின் திருப்பமாக 15 வது ஓவரின் 4வது பந்தில் கேப்டன் ஹர்மன்பிரீத் ஆஷ்லே கார்ட்னரால் ரன் அவுட்செய்யப்பட்டார்.. ஹர்மன்பிரீத் 34 பந்துகளில் (6 பவுண்டரி, 1 சிக்ஸ்) 52 ரன்கள் எடுத்தார்.. அவுட் ஆனதால் ஹர்மன்ப்ரீத் கோபத்தில் பேட்டை தூக்கி வீசினார். இந்த ரன் அவுட் தான் ஆட்டத்தை அப்படியே திருப்பி போட்டு விட்டது..
ஏனென்றால் அப்போது இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 32 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது.. ஆனால் அவர் அவுட்டான பின் வந்த ரிச்சா கோஷ் 14, சினே ராணா 11 அடித்தும் வெற்றி கிடைக்கவில்லை.. தீப்தி சர்மா கடைசி வரை நின்று போராடி 20 ரன்கள் சேர்த்தார். ஆனாலும் தோல்வியே மிஞ்சியது. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் மட்டும் 16 ரன்கள் தேவைப்பட்டது.. ஆனால் ஆஸியின் சுழற்பந்துவீச்சாளர் ஆஷ்லே கார்ட்னர் அற்புதமாக வீசி 10 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.. இதனால் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டியில் நுழைந்துள்ளது.. ஆஸ்திரேலிய அணியில் டார்சி பிரவுன் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு என அசத்திய ஆஷ்லே கார்ட்னர் ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
இந்நிலையில் இப் போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அவுட் ஆன புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முன்னாள் இந்திய கேப்டன் கேப்டன் தோனி கடந்த 2019 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையின் போது அரை இறுதி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக கடைசி நேரத்தில் போராடிக் கொண்டிருக்கும்போது ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும்..
ஒருவேளை தோனி ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டி மாறியிருக்கலாம். அப்போது ஒட்டு மொத்த இந்திய ரசிகர்களின் இதயமும் உடைந்திருக்கும். அந்த காட்சியை இப்போது பார்த்தாலும் அது சற்று வருத்தத்தை கொடுக்கும். அவ்வளவு எளிதில் மறக்க முடியாத போட்டி அது. அதேபோல இப்போது அந்த புகைப்படத்துடன் தற்போது கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ரன் அவுட் ஆனதையும் சேர்த்து வைத்து ரசிகர்கள் சோகமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.. நெருங்கி வந்து தோல்வியடைந்ததால் ரசிகர்கள் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் ஜெர்ஸி நம்பரும் (7) தோனியின் ஜெர்ஸி நம்பரும் ஒரே எண் என்பது குறிப்பிடத்தக்கது..
இந்நிலையில் தோல்விக்கு பின் பேசிய இந்திய கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், என் அழுகையை என் நாடு பார்க்க விரும்பவில்லை, எனவே நான் இந்த கண்ணாடிகளை அணிந்துள்ளேன், நான் உறுதியளிக்கிறேன், நாங்கள் மேம்படுத்துவோம், மேலும் தேசத்தை இதுபோல் வீழ்த்த மாட்டோம்”இதை விட துரதிர்ஷ்டவசமாக உணர முடியாது. ஜெமியுடன் மீண்டும் வேகத்தை பெற்றோம். இங்கிருந்து தோற்றோம், இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நான் ரன் அவுட் ஆன விதம், அதை விட துரதிர்ஷ்டவசமாக இருக்க முடியாது. இதைவிட துரதிர்ஷ்டவசமாக இருக்க முடியாது. குறிப்பாக ஜெமியும் நானும் திரும்பி வந்த பிறகு. இது நாங்கள் எதிர்பார்த்தது அல்ல. கடைசி பந்து வரை போராட விரும்பினோம். இந்த போட்டியில் நாங்கள் விளையாடிய விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஜெமிமாவுக்கு கிரிடிட் கொடுக்க வேண்டும், அவர் எங்களுக்கு வேகத்தை கொடுத்தார் என்றார்..
மேலும் முயற்சி முக்கியமானது, கடைசி பந்திற்குச் சென்றதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம்.கடைசி பந்து வரை போராட விரும்பினோம். இன்று நாங்களும் துரத்த விரும்பினோம், அதனால் அவர்கள் பேட்டிங்கைத் தேர்வு செய்தபோது நன்றாக இருந்தது. முதல் இரண்டு விக்கெட்டுகளை இழந்த பிறகும், எங்களிடம் ஒரு நல்ல பேட்டிங் வரிசை இருப்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் விளையாடிய விதம், இப்படி தோற்கும் தகுதி இல்லை. இவ்வளவு நெருக்கமாக வந்த பிறகு நாங்கள் இன்னும் பொறுப்புடன் பேட்டிங் செய்திருக்கலாம். நான் ரன் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் போட்டி வேறுவிதமாக இருந்திருக்கும். இன்னும் ஒரு ஓவரில் போட்டியை முடித்திருக்கலாம்” என்று ஹர்மன்ப்ரீத் கூறினார்.
Jersey no.7
Captain
WC Semi Finals
Run Chase
Run-out
A billion hopes shattered
Thala 🤝 Harmanpreet KaurNew year, new tournament, same old heartbreak! 💔 pic.twitter.com/uXQg7ozyPy
— Srini Mama (@SriniMaama16) February 23, 2023
India's No.7 taking India close in a semi-final of an ICC tournament and ending in a run-out… #HarmanpreetKaur #INDvsAUS #MSDhoni pic.twitter.com/MuHYyZOJN1
— CricTracker (@Cricketracker) February 23, 2023
Harmanpreet Kaur : don't want my country to see my crying, hence I am wearing these glasses, I promise, we will improve and wont let out nation down like this again.
What a statement from the Champ.#INDWvsAUSW pic.twitter.com/FHbwGjNg2q
— Roshan Rai (@RoshanKrRaii) February 23, 2023
Unforgettable Semi Final Run-outs for Indian Cricket 😐 #INDvsAUS #INDvAUS#INDWvAUSW #AUSvIND#HarmanpreetKaur pic.twitter.com/rE31FwY3Gi
— Vishwajit Patil (@_VishwajitPatil) February 23, 2023