
தூத்துக்குடி மாவட்டம் பார்வதி அம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் சுடலைமணி. இவர் கட்டிட வேலை பார்க்கிறார். இவருக்கு நில தரகரான பாளையங்கோட்டையைச் சேர்ந்த முருகன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
இந்த நிலையில் முருகன் ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி சுடலைமணி மற்றும் அவரது தங்கை குடும்பத்தினர் 22 லட்ச ரூபாய் பணத்தை முருகனிடம் கொடுத்துள்ளனர்.
இதனையடுத்து முருகன் பணி நியமன ஆணைகளை சுடலை மணியிடம் கொடுத்துள்ளார். அவை போலியானது என்பதை அறிந்த சுடலைமணி பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் முருகன் இதேபோல பல்வேறு நபர்களிடம் வேலை வாங்கி தருவதாக கூறி 42 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.