சென்னை காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு தவித்த நடிகர்கள் அமீர் கான், விஷ்ணு விஷால் நேற்று மீட்கப்பட்டனர். அமீர் கான் சென்னையில் சிக்கிக் கொண்டிருப்பதை தெரிந்துகொண்ட நடிகர் அஜித், நேரில் சென்று உதவி செய்திருக்கிறார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்ட நடிகர் விஷ்ணு விஷால், “எங்கள் நிலை பற்றி பொதுவான நண்பர் மூலம் அறிந்த, எப்போதும் உதவக்கூடியவரான நடிகர் அஜித் சார், எங்கள் வில்லா நண்பர்களுக்கு போக்குவரத்து உதவிகளை ஏற்பாடு செய்தார். லவ் யூ அஜித் சார்” என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.