
ஜூன் மாதத்தைப் போலவே ஜூலை மாதத்திலும் ஒரே ஒரு நாள்தான் அரசு விடுமுறை வருகின்றது. இந்த விவகாரம் அரசு ஊழியர்களுக்கும் மாணவர்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் 29ஆம் தேதி பக்ரீத் கொண்டாட்டத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
அதனால் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் தங்களின் சொந்த ஊருக்கு சென்றனர். அதனைப் போலவே ஜூலை மாதமும் 29ஆம் தேதி சனிக்கிழமை முகரம் பண்டிகைக்காக அரசு விடுமுறை விடப்படுகின்றது. மற்ற அனைத்து நாட்களிலும் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்கள் அனைத்தும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.