நீலகிரி மாவட்டம் குன்னூரை சேர்ந்த பாதிரியாரை மர்ம நபர் ஒருவர் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அந்த மர்ம நபர் குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறினார். இதனை நம்பி ஆன்லைன் மூலமாக பாதிரியார் 8000 ரூபாய் பணத்தை முதலீடு செய்தார். அவருக்கு கூடுதல் லாபம் கிடைத்தது. இதனை நம்பி 6 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். ஆனால் முதலீடு செய்த பணம் திரும்ப வரவில்லை. அந்த மர்ம நபரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இதே போல குன்னூர் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் தம்பதிக்கு வாட்ஸ் அப் மூலமாக குறைந்த முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என குறுந்தகவல் வந்தது. இதனை நம்பி பத்தாயிரம் ரூபாய் முதலீடு செய்தனர். அதில் லாபம் வந்ததால் மொத்தமாக 44 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் எந்த பணமும் வரவில்லை. இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.