
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை ஜூலை 24ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்ஜெட் அறிக்கையில் பெரிய அளவிலான சர்ப்ரைஸ் அளிக்கும் அறிவிப்புகள் வெளியாகலாம் என பலரும் காத்திருக்கின்றனர். தற்போது இந்தியாவின் வருமான வரி சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் பல்வேறு வரி விலக்குகள் உள்ளது.
ஆனால் அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2020 ஆம் ஆண்டில் குறைந்த வரி விகிதங்கள் கொண்ட புதிய வரி முறையை அறிமுகம் செய்தது மூலம் இன்று வரையில் மக்களுக்கு எது சிறந்த தேர்வு என்பதில் குழப்பம் உள்ளது. அதனைப் போலவே புதிய வரி முறையின் கீழ் மக்கள் முதலீடு செய்ய ஊக்குவிப்பது கிடையாது என்ற கருத்தும் நிலவுகின்றது. இந்த பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் இந்த அறிவிப்பை வெளியிடுவார் என்று மக்கள் அதிகம் எதிர்பார்க்கக்கூடிய மூன்று விஷயங்கள்.
பல ஆண்டுகளாக இந்த பிரிவின் கீழ் வழங்கப்படும் வரி விலக்கு உச்சவரம்பு 1.5 லட்சம் ஆக இருந்து வரும் நிலையில் இதனை உயர்த்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
சொந்த வீடு வாங்குவோருக்கு அளிக்கப்படும் வீட்டு கடன்களுக்கான வட்டி தொகை மீதான விலக்கு இரண்டு லட்சமாக உள்ள நிலையில் இதில் மாற்றங்கள் செய்யப்படலாம் என தெரிகிறது.
மாத சம்பளக்காரர்கள் standard Deduction அளவீட்டை அதிகரிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.