உத்திரபிரதேசம் மாநிலம் காசிப்பூர் மாவட்டம் நந்த் கஞ்சி என்ற பகுதியில் முன்ஷி பிந்த்(45) மற்றும் தேவந்தி(40) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு ராமசிஷ், ஆசிஷ் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனர். இதனிடையே நேற்று முன் தினம் இரவு பிந்துவும் தேவந்தியும் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தனர். இளைய மகன் வெளியே சென்று இருந்த நிலையில் மூத்த மகன் ராமசிஷ் வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் கூறிய ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் அங்கு வந்து குடிசையில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேரையும் கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தப்பி சென்றனர்.

நள்ளிரவில் வீடு திரும்பிய இளைய மகன் பெற்றோர்கள் மற்றும் சகோதரர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொலை செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.