
சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஒருவர் தூக்கில் தொங்கியபடி மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் தர்கான் என்ற கிராமத்தில் உள்ள வீட்டில் குடும்ப நபர்கள் கொல்லப்பட்டதாக போலீசுக்கு தகவல் கிடைத்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வீட்டிற்குள் சென்று பார்த்த போது பேரதிர்ச்சி காத்திருந்தது. ஆண், பெண், குழந்தை என ஐந்து பேர் கோடாரியால் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தனர்.
அதுமட்டுமல்லாமல் மனோஜ் சாகஹு என்பவர் வீட்டில் தூக்கிய தொங்கிய நிலையில் இருந்தார். இவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அப்போது கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதும் மனோஜ் சாஹு அவர்களை கோடாரியாள் வெட்டி கொன்று விட்டு தானும் தூக்கிட்டு உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.