இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போதைய சூழலில் இருபுற கிரிக்கெட் தொடர்களை நடத்தாத போதும், இரு நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் இடம்பெற்ற வாக்குவாதம் மூலம் மீண்டும் ரசிகர்களின்  கவனத்தை ஈர்த்துள்ளனர். இந்தியாவின் வீரேந்திர சேவாக் மற்றும் பாகிஸ்தானின்  வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் ஆகியோர், தங்களது ஆட்ட காலத்திலேயே பரஸ்பர போட்டியால் புகழ்பெற்றவர்கள். வீரராக இருந்த காலம் முடிந்த பிறகும், இருவரிடையேயான பேச்சுப் போர்களும் ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Virender Sehwag (@virendersehwag)

“>

சமீபத்தில் சேவாக் நடிகைகள் மந்திரா பேடி மற்றும் சாஹிபா பாலியுடன் இணைந்து ஒரு விளம்பரத்தில் நடித்தார். அதை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அவர், “ஒரு ட்ரிபிள் செஞ்சூரியன் ஹேண்டிலில் இருந்து @fwd விளம்பரம் வருது” என பஞ்ச் கொடுத்தார். இதற்கான பதிலாக சோயப் அக்தர், “@fwd வாலோ, அடுத்த விளம்பரத்துக்கு ஸ்டைலிஷ் பையனையும் எடுத்துக்கோங்க (என் DM ஓபன் தான்). ஹஹஹா” என விளாசியிருந்தார். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே விவாதம் சுறுசுறுப்பாகி, ரசிகர்களிடையே கலகலப்பை உருவாக்கியது.

இந்நிலையில் அக்தர் வெளியிட்ட வீடியோவில், “வீரூ பாஜியின் வீடியோ பார்த்தேன். 20 வருடங்களா அதே டேப் கேட்கிறேன் – ‘300, 300, 300’. சகோதரா, நானும் அந்த போட்டியில் இருந்தேன். அப்படியே பேசிக்கொண்டே இருந்தால், கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ்ல நுழைய உதவிகிரேன் – ‘உலகத்தில் 300 என அதிகமா சொல்லும் நபர்: வீரேந்திர சேவாக்!’” எனக் கிண்டலாக பேசியிருந்தார். அவர் குறிப்பிட்டது போல, 2004-ல் முல்தானில் நடைபெற்ற போட்டியில் சேவாக் 309 ரன்கள் அடித்தார், அதேபோல் அக்தருக்கு அந்த போட்டியில் எந்த விக்கெட்டும் கிடைக்கவில்லை.

 

View this post on Instagram

 

A post shared by Shoaib Akhtar (@imshoaibakhtar)

“>

21 ஆண்டுகளுக்குப் பிறகும், அந்த மாஸ்டர் கிளாஸ் இன்னிங்ஸை மறக்காமல் தொடர்ந்து குறிப்பிடும் சேவாக் மீது, அக்தரின் எரிச்சலும், ரசிகர்களிடையே வாதங்களை கிளப்பி உள்ளது. இரு கிரிக்கெட் மாபெரும் நாயகர்களுக்கிடையேயான இந்த விவாதம், பழைய போட்டிகளை மீண்டும் நினைவுபடுத்துவதோடு, இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்கான ஆவலையும் உற்சாகத்தையும் ரசிகர்கள் மத்தியில் உயிரோட்டமாக வைத்திருக்கிறது.