இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ள நிலையில் ஆதார் அட்டையை போல இந்தியாவில் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே நாடு ஒரே அடையாள அட்டை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த அட்டையில் மாணவர்களுக்கு தனித்துவமான ஐடி இருக்கும் எனவும் இதனை ஸ்கேன் செய்யும் போது மாணவர்களின் கல்வி குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அட்டைக்கு automated permanent academic account registry (APAAR ) என பெயர் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அடையாள அட்டை அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும். மேலும் அபார் அடையாள அட்டை பள்ளியில் இருந்து கல்லூரிக்கு மாணவர்கள் மாறுவதை எளிமையாக்கும் . இந்த அட்டை குறித்த கூடுதல் தகவல்களுக்கு abc.gov.in  என்ற இணையதள பக்கத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.