நாடாளுமன்ற மக்களவையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் அந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி பெறுகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் ஆண்டனியிடம் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் கூறியதாவது, வசதி இருந்தால் ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அறிமுகப்படுத்தட்டும். அதே மாதிரி ஒரே நாடு, ஒரே மதம் மற்றும் ஒரே ஜாதி ஆகியவற்றையும் முடிஞ்சா பண்ணிக்கலாம். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு முடிந்தால் ஒரே நாடு ஒரே மதம் ஒரே ஜாதி என்ற முறையை கொண்டு வரட்டும் என்று விஜய் ஆண்டனி சொன்ன பதில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் இது தொடர்பான கேள்விக்கு முதல் முறையாக பதில் அளித்துள்ள நடிகர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.