சென்னையில் சமீப காலமாகவே ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிரடியாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 7060 ரூபாய்க்கும் ஒரு சவரன் 56,480 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்துள்ளது. நேற்று வரை 98 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிராம் வெள்ளி இன்று விலை கிராமுக்கு 3 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் 101 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 1,10,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 21ஆம் தேதி முதல் மாறாமல் இருந்த வெள்ளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு 3000 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. மேலும் தொடர்ந்து தங்கம் விலை அதிகரித்து வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியையும் பொது மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள பெடரல் வங்கியின் வட்டி குறைப்பு, டாலர் மதிப்பு சரிவு, போர் போன்ற காரணங்களால் பலர் தங்கம் மற்றும் ETF-ல் முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் இதன் காரணமாகத்தான் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது.