உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாட்ஸ் அப்  பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையில் whatsapp பல அப்டேட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பெரும்பாலானவர்கள் இரண்டு சிம் கார்டுகள் பயன்படுத்துகிறார்கள். ஒன்று  தனிநபர் கணக்காகவும், மற்றொன்று தொழில் ரீதியான தொடர்புகளுக்கு என்று இரண்டு அக்கவுண்டுகள் பயன்படுத்துகிறார்கள். இதற்காக இரண்டு ஃபோன்களை பயன்படுத்தும் சூழ்நிலையில் இருக்கின்றோம். இந்த நிலையில் ஒரே போனில் இரண்டு கணக்குகளை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

வாட்ஸப்பில் settings > Account > Add Account என்ற வசதிக்குள் சென்றால் கூடுதலாக ஒரு அக்கவுண்டை கனெக்ட் செய்து கொள்ளலாம். மேலும் தற்போது வாட்ஸ்அப்பில் வழங்கப்பட்டுள்ள Tranளfer Chats சென்றால் அதில் காட்டும் QR கோடு ஸ்கேனர் மூலம் புதிய ஸ்மார்ட்போனுடன் கனெக்ட் செய்து அனைத்து சேட்களை புதிய ஸ்மார்ட்போனிற்கு மாற்றிக் கொள்ளலாம். மெட்டாவின் பேஸ்புக்கில் உள்ள அவதார் உருவாக்கிக் கொள்ளும் வசதியும் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.