தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவின்போது விஜய் மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது பாஜகவும் திமுகவும் பொது மக்களை நம்ப வைப்பதற்காக வேண்டுமென்றே சண்டை போடுவதாக கூறினார். இது பற்றி அவர் கூறும் போது, இப்ப புதுசா ஒரு பிரச்சனையை கிளப்பி விடுகிறார்கள். மும்மொழி கல்வி கொள்கை என்று. இதை இங்கு செயல்படுத்தவில்லை என்றால் கல்விக்கான நிதியை மாநில அரசுக்கு கொடுக்க மாட்டார்களாம். இதைப் பார்க்கும்போது எல்கேஜி பசங்க சண்டை போட்டுக் கொள்கிற மாதிரி இருக்குது.

அந்த பாசிசமும் பாயாசமும். அதாங்க நம்ம அரசியல் எனிமியும் கொள்கை எனிமியும் பேசி வைத்துக்கொண்டு மாறி மாறி சோசியல் மீடியாவில் ஹேஷ்டேக் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இவங்க ரெண்டு பேரும் அடிச்சிக்கிற மாதிரி அடிச்சுக்குவாங்களாம். அதை மக்கள் நம்பணுமாம். What’s Bro it’s very wrong Bro என்று கூறினார். மேலும் திமுக மற்றும் பாஜகவை விஜய் விமர்சித்த நிலையில் சீமானையும் அவர் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய what’s Bro it’s very wrong bro என்ற வசனத்தை வைத்தே மறைமுகமாக விமர்சித்தார். மேலும் நடிகர் விஜய் இந்த வசனத்தை சொல்லும்போது அரங்கத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

 

View this post on Instagram

 

A post shared by Salmaan Faris (@salfaric_acid)