
திருச்சி மாவட்டத்தில் உள்ள துவாக்குடி பகுதியில் அர்த்தனாரி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோவிந்தராஜ் (52), குமரன்(43) ஆகிய இரு மகன்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகாத நிலையில் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் மது போதையில் நேற்று இரவு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது திடீரென தகராறு ஏற்பட்டது. அப்போது கோவிந்தராஜ் தன்னுடைய தம்பியை இரும்பு ராடால் தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடித்து பலியானார். இது தொடர்பாக துவாக்குடி காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குமரன் சடலத்தை மீட்டு பிரத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து கோவிந்தராஜை அவர்கள் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.