
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜயை சாட்டை துரைமுருகன் பலவாறு விமர்சித்து எக்ஸ் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் விஜய் ரசிகர்களை விமர்சித்து அவர் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது அரசியல் மற்றும் ஒழுக்கம் என்றால் என்னவென்று விஜய் ரசிகர்களுக்கு தெரியாது என்பது போல அந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். அதாவது ரஜினிகாந்தை சீமான் சந்தித்த நிலையில் அரசியல் மற்றும் திரைப்பயணம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பேசியதாக கூறினார். அது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று சாட்டை துரைமுருகன் கூறிய நிலையில் விஜய் ரசிகர்கள் அதை நினைத்து வருந்துவதாக அவர் மறைமுகமாக விமர்சிக்கிறார்.
அந்த வகையில் சீமானின் தரமான சம்பவம். கதறும் விஜய்யின் ஸ்கூல் பசங்க என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது மாவட்ட ஆட்சியர்கள் ஸ்கூலுக்கு விடுமுறை விட்டவுடன் வீட்டிலிருந்து கொண்டு செல்போனை எடுத்துக்கொண்டு சும்மா ஆபாசமாக கமெண்ட் போடுகிறார்கள். இதில் ஒழுக்கமான அரசியல் செய்வோம் ராணுவ கட்டமைப்புடன் இருப்போம் என்று கூறுகிறார்கள். அவர்களுக்கு ஒழுக்கம் மற்றும் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாது. தீண்டாமை என்றால் என்னன்னே தெரியாது ஆனால் அவர்கள் தீண்டாமை எனும் தீப்பந்தம் எடுத்து தீண்டாமை ஒழித்து என்று பாட்டு பாடுகிறார்கள் என்பது போல் கூறி அவர் நடனமாடி விஜய் ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.
சீமானின் தரமான சம்பவம் | கதறும் விஜய் ஸ்கூல் பசங்க |https://t.co/73oVSDQAzD pic.twitter.com/vWplCzJPSH
— Duraimurugan (@Saattaidurai) November 22, 2024