ஜப்பான் நாட்டில் ஒரு சூப்பர் மார்க்கெட் நிறுவனம் உள்ளது. இதன் பெயர் AEON. இந்நிலையில் இந்த நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் தங்களது ஊழியர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதை கவனிப்பதற்காக ஒரு ஏஐ தொழிநுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர்  Mr. Smile. இதனை  ஜப்பான் நாட்டின் இன்ஸ்டா வி ஆர் என்ற டெக் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

இந்த ஏஐ சிஸ்டம் வாய்ஸ் ஸ்டோன், பேஷியல் எக்ஸ்பிரஷன்ஸ் மற்றும் வாடிக்கையாளர்களை கிரேட் செய்யும் விதம் உள்பட 450 எலிமென்ட்ஸ்களை கொண்டுள்ளது. அது மட்டுமன்றி தங்கள் நிறுவனத்தை சேர்ந்த ஊழியர்கள் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் அது கண்காணிக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை அந்த  நிறுவனம் 8 கடைகளில் பொருத்தி 3400 ஊழியர்களை கண்காணித்து வருகிறது. இதனால் மூன்று மாதத்தில் ஊழியர்கள் வாடிக்கையாளர்களை கையாளும் விதம் சில மடங்கு அதிகரித்துள்ளது. மேலும் இது குறித்து இணையத்தில் பலரும்  “முகத்தில் புன்னகை பூக்க செய்வது இதயபூர்வமானதாக இருக்க வேண்டும் ப்ராடக்ட் ஆக இருக்கக் கூடாது” என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.