
பிரபல தனியார் தொலைக்காட்சி பிரபலம் DD நீலகண்டன் ஜெயிலர் திரைப்படம் குறித்து தனது கருத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயிலர் திரைப்படம் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பல சினிமா துறையைச் சேர்ந்த பிரபலங்களும் படத்தை பார்த்துவிட்டு தொடர்ச்சியாக தங்களது வாழ்த்துக்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், பிரபல தனியார் தொலைக்காட்சி புகழ் டிடி நீலகண்டன் அவர்கள் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்துவிட்டு, ட்விட்டர் பக்கத்தில் படம் குறித்த தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.
அதில், படத்தில் மாஸ் சீன் காட்சிகள் ஒவ்வொன்றும் சாவடி பேயடி. தலைவர் க்லோசப் சாட் அனைத்திலும் அட்டகாசமாக நடித்துள்ளார். இசையமைப்பாளர் அனிருத் அவரது வேலையை சிறப்பாக செய்துள்ளார். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் பணியும் பாராட்டுக்குரியதாக உள்ளது என மகிழ்ச்சி பொங்க தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.