
மகளிர் சுய உதவி குழுக்களால் இயக்கப்படும் தினை உணவகங்கள், ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் செயல்படுத்தப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய, மதி சந்தை என்ற இணைய வழி விற்பனை தளத்தை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு புதிதாக10 ஆயிரம் சுயஉதவி குழுக்கள்உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு சுழல் நிதி வழங்க ரூ.15 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரம் சுயஉதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதியாக ரூ.75 கோடி, 3 ஆயிரம் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு வறுமை நிலை குறைப்பு நிதியாக ரூ.7.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.