
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று இரண்டாவது நாளாக தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் மற்றும் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உட்பட சுமார் 7,500 பேர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் புஸ்ஸி ஆனந்த் பேசினார். அவர் பேசியதாவது, எப்போது பேச வேண்டும் எப்போது மக்களை சந்திக்க வேண்டும் என்பது தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய்க்கு நன்றாக தெரியும். ஒவ்வொரு வீட்டிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு ஓட்டு இருக்கிறது.
அதை மறுக்க முடியாது. யாரும் யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்முடைய உயிர் மூச்சு எல்லாம் விஜய்க்கு தான். மக்களோடு மக்களாக இருந்து பணிகளை செய்ய வேண்டும் என்றார். மேலும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நம்முடைய இலக்கு விஜயை முதல்வராக்குவது மட்டும்தான் என்றும் கூறினார்.