
தெலுங்கானா மாநிலத்திலிருந்து தனியார் ஸ்லீப்பர் கோச் பேருந்து ஒன்று ஆந்திராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அதில் 2 ஓட்டுனர்கள் பேருந்தை ஒருவருக்கொருவர் மாற்றி ஓட்டி வந்துள்ளனர். இந்த பேருந்தில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அந்த பெண்ணை ஓட்டுனர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து பேருந்து ஹைதராபாத்துக்கு வந்து சேர்ந்தது. அதன்பின் அந்த இளம் பெண் நடந்த சம்பவத்தை பற்றி காவல்துறையினிடம் செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேருந்தை மடக்கி நிறுத்தினர். அதன்பின் காவல்துறையினர் பேருந்து ஓட்டுனரை பிடிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
பின்பு காவல்துறையினர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து பேருந்தை ஒட்டிய மற்றொரு ஓட்டுனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.