சென்னையில் நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம் பகுதியில் இருந்து புரசைவாக்கம் நோக்கி  பேருந்து ஒன்று சென்றது. இதில் கல்லூரி மாணவி மாணவி ஒருவர் ஏறினார். அந்த பேருந்தில் மக்களின் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி ஒருவர் அந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

அதனால் கோபமடைந்த அந்தப் பெண் திடீரென சத்தம் போட்டார். அப்போது பேருந்தில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதைத்தொடர்ந்து அவரை அருகிலிருந்த கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மேலும் காவல்துறையினர் அந்த வாலிபரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.