உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ் பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த ஒரு பயணியை துரிதமாக செயல்பட்டு ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். அதாவது பயணி ஒருவர் சென்று கொண்டிருந்த ரயிலில் இருந்து திடீரென எதிர்பாராத விதமாக பிளாட்பார்மில் விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த போலீசார் துரிதமாக செயல்பட்டு அந்த பயணியை பத்திரமாக மீட்டனர். அந்த வாலிபரின் உயிரை காத்த போலீசார் பெயர் கபில் குமார் மற்றும் சந்தோஷ் யாதவ் ஆகும். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது மிகவும் வைரலாகி வருகிறது.