மயிலாடுதுறை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(74) என்பவர் தனது மனைவியை வழியனுப்புவதற்காக ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ரயில் புறப்பட்டதும் பாலசுப்பிரமணியம் கீழே இறங்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக கால் தவறி நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையே விழுந்து விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் பாலசுப்பிரமணியனின் கட்டைவிரல் சிதைந்தது.

அவரது தலை மற்றும் இடுப்பு பகுதியில் படுகாயம் ஏற்பட்டது. இதற்கிடையே கணவர் கீழே விழுந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த பாலசுப்ரமணியனின் மனைவி ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்தார். இதனால் அவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து படுகாயமடைந்த பாலசுப்பிரமணியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.