மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பர்கத் சேக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஓடும் ரயிலில் கைகளால் கம்பியை பிடித்தபடி கால்களால் சறுக்கி கொண்டே சாகசம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனை அவர் வீடியோவாக எடுத்து ‌ சமூக வலைதளங்களில் லைக்ஸ் களை பெறுவதற்காக பதிவிட்டு வந்தார். இது தொடர்பான வீடியோ ஒன்று ரயில்வே காவல்துறையினர் கவனத்திற்கு சென்ற நிலையில் வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து அவருடைய வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

அதாவது அந்த வாலிபர் ஒரு கை மற்றும் கால்களை இழந்து வீட்டில் முடங்கி கிடந்துள்ளார். அதாவது கடந்த ஏப்ரல் மாதம் ஒரு ரயிலில் அவர் சாகசம் செய்துள்ளார். அப்போது ஏற்பட்ட விபத்தில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரயில்வே காவல்துறையினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது அவருடைய உயிரைக் காக்க ஒரு கை மற்றும் கால்களை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் ஒரு கை மற்றும் காலை மருத்துவர்கள் அகற்றினர். மேலும் பாதிக்கப்பட்ட அந்த வாலிபர் என்னை போன்று யாரும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடாதீர்கள் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.