
கேரளாவில் இருந்து சென்னை நோக்கி வந்த விரைவு ரயிலில் பயணித்த ஒரு பெண் மென்பொறியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் நிகழ்ந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகாரின்படி, கரூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயிலில் ஏறிய அந்த பெண், காட்பாடி அருகே வந்தபோது 2 மர்ம நபர்கள் அவரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் சென்னை சென்ட்ரல் ரயில்வே போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரை பெற்ற போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை துவங்கியுள்ளனர். ரயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.