ஓட்டுநர் உரிமத்திற்கான கட்டணத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள  ஆர்டிஓ அலுவலகத்தில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான கட்டணம் 250 வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனையாடுத்து நிரந்தர உரிமம் பெறுவதற்கான  கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது.

மேலும் இரு சக்கர வாகன உரிமம் பெற 100 மற்றும் நான்கு சக்கர வாகனமான கார் ஓட்டுனர் உரிமம் 150 ரூபாய் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதுவரை கார் ஓட்டுநர் உரிம கட்டணம் 1350 ஆகி இருந்த நிலையில் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து 1,600 ஆக அதிகரித்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு  மத்தியில் ஓட்டுனர் உரிமத்திற்கு  கட்டணத்தை அரசு உயர்த்தியுள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.