
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த ஒருவரது மோட்டார் சைக்கிள் திருடு போனது. இந்த நிலையில் திருடிய மோட்டார் சைக்கிளை 1500 ரூபாய் பணம் மற்றும் மன்னிப்பு கடிதத்துடன் உரிமையாளர் வீட்டின் முன்பு திருடன் நிறுத்தி சென்றுள்ளார். பிளாக் பாண்டா என்ற பெயரிலான அந்த கடிதத்தில் அவசரத்துக்கு எடுத்துட்டேன்.
தவறை உணர்ந்து 450 கிலோமீட்டர் தூரம் பயணித்து கொண்டு வந்துள்ளேன். 1500 ரூபாய் பணம் பெட்ரோல் டேங்கில் இருக்கு. எப்படியும் கெட்ட வார்த்தை பேசி இருப்பீர்கள். அதற்கு நீங்கள் வருத்த வேண்டும். இல்லையென்றால் நாங்கள் வருந்த வைப்போம் என அந்த கடிதத்தில் எழுதியுள்ளனர்.