பெங்களூரில் உள்ள ஜெய் நகர் அருகே ஒரு பெண் தனது வளர்ப்பு நாயுடன் நடந்து சென்றுள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் அந்த மர்ம நபர்கள் அந்த நாயின் செயினை பிடித்து எடுத்து நாயை அலேக்காக தூக்கி சென்றனர்.

இதனை பார்த்து நாயின் உரிமையாளர் இருசக்கர வாகனத்தின் பின்னால் ஓடுகிறார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து நாயின் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

ரிஷி என பெயரிடப்பட்ட அந்த நாயின் மதிப்பு பத்தாயிரம் ரூபாய் ஆகும். அந்த நாயை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் அடையாளம் கண்டு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.