திருநெல்வேலி மாவட்டத்தில் ஓய்வு பெற்ற உதவிக்காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நூருல் நிஷா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜாகிர் உசேன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சந்தேகிக்கப்படும் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட 6 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். தற்போது மேலப்பாளையத்தில் பதுங்கி இருந்த கிருஷ்ணமூர்த்தியின் மனைவி நூருல் நிஷாவை போலீசார் கைது செய்தனர்.