
தமிழகத்தில் தியாகிகள் பென்ஷன் தொகை உயர்த்தப்படும் என ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தின விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அந்த வகையில் தற்போது தியாகிககள் பென்ஷன் தொகை உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மாதந்தோறும் 20000 ரூபாய் பென்ஷன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் இனி 21 ஆயிரம் ரூபாய் பென்ஷன் பணம் அவர்களுக்கு வழங்கப்படும்.
அதன் பிறகு சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வழங்கப்பட்டு வந்தது. இந்த தொகை தற்போது 10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து கட்டபொம்மன் மற்றும் வ உ சி ஆகியோரின் வழித் தோன்றல்களுக்கு 10,000 ரூபாய் பென்சன் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அது 10,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு நேற்று வெளியிட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.